திங்கள், மார்ச் 12, 2012

நானும் கவிஞனே

கவிதை எழுதுபவன்தான் கவிஞன் என்றால்
நானும் கவிஞனே
உன் பெயர் எழுதியதால்...!

சிரிக்க மட்டும் அனுமதி

சிரிக்க மட்டும் அனுமதி
பேசவே
அனுமதி இல்லாத தேர்வறையில்
அவ்வப்போது
சிரித்துக்கொண்டிறுக்கிறது.
அவள் கால்கொலுசு மட்டும்...!  

கூடாத மேகம்

தென்மேற்கு பருவக்காற்று
கூட்டிச்செல்லும் மேகக்கூட்டங்களோடு
கூட மறுக்கிறது
ஒரு குட்டி மேகம் மட்டும்.
அது அவளின் கூந்தல்...!

வாடாத பூ

உன்
ரெட்டை ஜடை வாய்க்காலில்
நீந்திச் செல்கிறதோ நீர்.
நீ சூடும் பூ மட்டும்
வாட மறுக்கிறதே...

முதல் குழந்தை கவிஞன்

உலகிலேயே முதல் குழந்தை கவிஞன்
நானாகத்தான் இருப்பேன்; ஆம்
ஒன்றாம் வகுப்பிலே
உன் பெயர் எழுதிவிட்டேனே…!

பொய் பேசும் கவிதை

பொய் பேசும் கவிதை
கவிதை பொய் பேசும்
உரைநடை உண்மை பேசும்.
உன்னை கவிதை என்கிறேன்
நீயோ
என்னை காதலிக்கிறேன் என்கிறாய்.
கவிதை பொய் பேசுகிறதோ...?

திரும்பாத தேவதை

திரும்பாத தேவதை  
அளவான உடை
அழகான இடை
அவள் பின்னாலே என் நடை
அவள் பார்வை என் மேல் விழ
நான் கையாண்ட கலை
இருமல் தும்மல் விக்கல்
ஆயினும் திரும்பவில்லை அவள்
இறுதியாக அவள்
நுழைந்த இடத்தில்
என் பார்வை விழுந்த இடத்தில்
எழுதப்பட்டிருந்தது.
உங்களை அன்புடன் வரவேற்க்கிறது.
"
காது கேளாதோர் மருத்துவமனை."

வியப்பான மருத்துவர்

வியப்பான மருத்துவர்
நாடிப் பிடித்த மருத்துவர்
வியாதி இல்லையென்று சொல்லிவிட்டு
வியப்பாக பார்க்கிறார்.
எதிரில் நிற்கும் என்னவளால்
எகிரிப்போன
இதய துடிப்பால்...!

ஞாயிறு, மார்ச் 11, 2012

அசெளகரியமான தார்சாலை

அசெளகரியமான தார்சாலை  
அனைவருக்கும் அசெளகரியமாய்ப்படும் 
குண்டும் குழியுமானத் தார்சாலை
எனக்கு மட்டும் செளகரியப்படுகிறது. 
அடர்த்தியான ஆட்டோ பயனத்தில்
அவளின் பக்கத்தில் நான்...!